Sivagamiyin Sabatham
சிவகாமியின் சபதம் + shipping fee*(Free shipping for orders above Rs.499 within India)
Availability: In Stock
Category : Historical Novels
Author : Kalki R.Krishnamurti
Publication : New Century Book House
வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழிவகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்கு ஆசிரியராக இருந்தபோதும், அவர் தமிழுக்காக ஆற்றிய பணி வரலாற்றில் இடம் சிறப்புக்குரியது. தமிழில் எதனையும் தெளிவாகவும் சுவையாகவும் எழுதலாம் என்று காட்டினார் கல்கி. சிறுகதைகளையும், நகைச்சுவைச் சித்திரங்களையும், கலை விமரிசனங்களையும், அரசியல் கட்டுரைகளையும், வேறு பலவகைக் கட்டுரைகளையும், நாவல்களையும், எழுதி எழுதிக் குவித்தார். கல்கி பத்திரிகையின் ஆரம்ப காலங்களில் ஒவ்வோர் இதழிலும், பல வேறு தலைப்பில் பல வேறு கட்டுரைகள் எழுதி முக்கால் பத்திரிகையை நிரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு நேர்ந்தது. சிறிதும் சளைக்காமல் அதைச் செய்தார். எதை எழுதினாலும் பளிச்சென்று தெளிவாக விளங்கும் நடையில் எழுதினார்; ஆவலைத் தூண்டும் வகையில் எழுதினார்; சுவைத்துப் படிக்கும்படி எழுதினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பதில்லை. மற்றவர்களிலும் சிலரே படிப்பார்கள். கல்கி பேனாப் பிடித்து எழுதத் தொடங்கிய பிறகு அடுப்பங்கரை முதல் அலுவலகங்கள் வரையில் அவருடைய எழுத்துப் புகுந்தது. ஆங்கிலப் பட்டதாரிகளும் பெரிய வேலையில் இருந்த அதிகாரிகளுங்கூட அவர் எழுதியவற்றைப் படித்து அவற்றைப்பற்றி உரையாடத் தொடங்கினார்கள்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.