x

Anton Pavlovich Chekhov

ஆன்டன் செகாவ் ஜனவரி 29, 1860 – ஜுலை 15, 1904) ஒரு ரஷ்ய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார். செகாவின் ந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. செகோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்த போது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார். இவரது கதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Related Products