Ku.Azhagirisamy
கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் ஈடுபட்டார். இவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணின் இளமைக் கால மற்றும் ஒரே ஊரைச் சேர்ந்த (இடைச்செவல் கிராமம்) நண்பர் ஆவார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இந்த இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970-ஆம் ஆண்டு, இவரது ‘அன்பளிப்பு’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.