x

Thi.Janakiraman

தி.ஜா. என்றழைக்கப்படும் தி.ஜானகிராமன் (பிப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவங்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். 'சக்தி வைத்தியம்'என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழில் மிகப்புகழ் பெற்ற மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர். தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்த தி.ஜா. பத்து ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார், பின்பு, அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி.ஜானகிராமன், 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை எய்தினார்.

Related Products