Ashokamitran
அசோகமித்திரன் (பிறப்பு: செப்டம்பர் 22, 1931 – இறப்பு: மார்ச் 23, 2017) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார். இவருடைய எழுத்து எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1996-ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்னும் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.