x

Nakulan

நகுலன் (21 ஆகஸ்ட், 1921 - 17 மே, 2007) தமிழ் எழுத்தாளர். டி.கே.துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில். ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும், ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய ஆங்கில படைப்புகளை இயற்பெயரிலும், தமிழ் படைப்புகளை புனைபெயரிலும் எழுதி வந்தார். தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் நாவல்களில் புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும், நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள், அவர் மனித வாழ்வின் இருப்பு சார்ந்தே கவிதைகளை எழுதியுள்ளார்.

Related Products