x

A.Ramasamy

அ. ராமசாமி (பிப்.17,1959) மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பின் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை (1987-1989), புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி (1989-1997) ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழியல்துறை இணைப்பேராசிரியராகவும் (1997- 2005), பேராசிரியராகவும் (2005-2015) முதுநிலைப்பேராசிரியரகவும் (2015-2019) பணியாற்றி ஓய்வுபெற்றார். நடுவே இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம், போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராக இரண்டாண்டுக் காலம் (2011-2013) பணியாற்றினார் கல்வித்துறை சார்ந்து மொழிப்புல முதன்மையர், அம்பேத்கரியல் மைய இயக்குநர், நூலகம், நாட்டு நலப்பணித்திட்டம், பதிப்புத்துறை, இளைஞர் நலம் போன்ற அமைப்புகளின் ஆலோசனை மற்றும் பணிப்பொறுப்புகளையும் வகித்தார். இந்தியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இடம் பெற்று தமிழ் இலக்கியக் கல்வியின் போக்குகளை உருவாக்குவதில் –குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இடத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவரத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார் இலங்கை, மலேசியப் பல்கலைக் கழகங்களில் கல்விசார் குழுக்களிலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். ஜூன் 30, 2019-ல் பணி ஓய்வு பெற்றார். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுகிறார். இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products