x

A.Umar Farook

அ.உமர் பாரூக், (பிறப்பு:1978) மாணவப்பருவத்திலேயே எழுதத் துவங்கியவர். தொண்ணூறுகளின் மத்தியில் கவிதைகள் எழுதத் துவங்கினார். சிறுகதை, நாவல் என்று தொடரும் இவர் படைப்புகளின் வழியாக தற்போது மருத்துவக் கட்டுரையாளராக வெளிப்பட்டுள்ளார். இலக்கியச் சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் எழுத்தத்துவங்கிய இவர், பிரபல வார, மாத இதழ்களில் மருத்துவத்தொடர்களை எழுதி வருகிறார். தேனி மாவட்டம் போடியில் பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தில் 1995 – 97 வருடங்களில் ஆங்கில மருத்துவத்தின் சார்பு மருத்துவப் பட்டயப் பயிற்சி ( மருத்துவ ஆய்வுக்கூடத் தொழில் நுட்பம்) பெற்றார். தொடர்ந்து கல்கத்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் டெக்னாலஜியில் எக்ஸ்ரே தொழில்நுட்பம் பயின்றார். ம்துரைக் காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் அக்குபங்சர் பட்டயம் மற்றும் அக்குபங்சர் பட்ட மேற்படிப்பைப் பயின்றார். தேனி மாவட்டம், கம்பம் மருத்துவ ஆய்வுக்கூட்த்திலும் மற்றும் கேரளா மாநிலம் கொல்லத்தில் ராணி இரத்தவியல் ஆய்வு மையத்திலும் இரத்தவியல் துறைநுட்புனராகப் பணியாற்றி, தேனி தமிழ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் ஸ்டடிஸ் நிறுவனத்தில் மருத்துவ ஆய்வுக்கூட தொழிநுட்ப பயிற்றுநராகப் பணிபுரிந்தார். தற்போது அக்கு ஹீலராகப் பணிபுரியும் அ.உமர் பாரூக், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பகுதி நேர அக்குபங்சர் விரிவுரையாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தமிழ்ப் பல்கலைகழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் அக்குபங்சர் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிகிறார். இவரது மருத்துவக் கட்டுரைகள் மட்டுமே இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன.

Related Products