x

Ayisha Era.Natarasan

ஆயிஷா நடராசன் (எ) இரா.நடராசன் (பிறப்பு: 8 டிசம்பர் 1964), இவர் எழுதிய 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த 'ஆயிஷா' சிறுகதை, இவருடைய இரா.நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும், தனிநூலாகவும் (தமிழிலும், ஆங்கிலத்திலும்) கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நடராசன், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களுக்காகவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இவரின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் சில, தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகச் சிறுகதை தொகுதிகள் சிலவற்றில் இவரின் கதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு, பன்னாட்டுப் பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளன. இவரது "விக்னாய விக்ரமாதித்தன் கதைகள்’ என்னும் நூலுக்கு 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products