C.Saravana Karthikeyan
சி.சரவணகார்த்திகேயன் (ஆகஸ்ட் 13, 1984) தமிழில் புனைகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிவரும் எழுத்தாளர். அறிவியல் அரசியல் சினிமா என வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரை நூல்களை எழுதுகிறார். ஈரோடு பிரசாந்தி வித்யா பவன்பள்ளியில் ஆரம்பக்கல்வியும், சின்னியம்பாளையம் பிரசாந்தி வித்யா பவன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் ஈரோடு , மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்தில் மேல்நிலைக்கல்வியும் முடித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் பட்டம் பெற்றார். சிறுகதை, நாவல், கட்டுரைகள் என இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.