Danushkodi Ramasamy
தனுஷ்கோடி ராமசாமி, (1945 - 2005) தமிழ் எழுத்தாளர். இவரது படைப்புகள் பொதுவுடைமை சிந்தனைகளாலும், தொழிலாளர்களின் அவலநிலைகளைச் சித்தரிப்பதாகவும் அமைந்தது. ‘தமிழ்நாட்டு கலையுலக பெருமன்றம்’ என்ற இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தின் சாத்தூருக்கு அருகில் உள்ள கே. மேட்டுப்பட்டியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். கலை மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சாத்தூரில் உள்ள ஆயிர வைசியா உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளுக்கு இவ்வாசிரியர் பணி தலையீடாக உணர்ந்தால் அப்பணியை துறந்தார். மீண்டும் அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருடைய இளமைக்காலத்தில் தனித்தமிழ் இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கைகளின் ஆதரவாளராகவும் அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். பின்னர் அவர் மார்க்சியத்தின் ஆதரவாளராக மாறினார். இவரது முதல் சிறுகதை ‘சிம்ம சொப்பனம்’ 1978-ஆம் ஆண்டில் வெளிவந்தது. எழுத்தாளராக இருந்த போது, இவர் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். 1985-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ‘தோழர்’ என்ற நாவல் இவரது சிறந்த படைப்பு ஆகும். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. 1990-ல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வெளியீட்டு அங்கமான ‘நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ இவருக்கு சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளர் என்ற விருது வழங்கியது. 1992-ல், ‘தீம்தரிகிட’ என்ற இவரது நாவலுக்காக லில்லி தேசிகமணி நினைவு விருதினைப் பெற்றார். 1991-ஆம் ஆண்டில், ஆனந்த விகடன் வைரவிழா சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றார். அக்னி சுபமங்களா நடத்திய 94-வது சிறுகதை போட்டியில் முதல் பரிசினை வென்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பத்துக்கும் மேற்பட்ட சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகளை எழுதிய ராமசாமி, 2005-ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று தனது 60-வது வயதில் காலமானார்