D.Pandian
தா.பாண்டியன் (18 மே 1932 - 26 பிப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார். இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 1989, 1991 தேர்தல்களில், வடசென்னைத் தொகுதியில் இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.