Jean-Paul Sartre
ழான் பால் சார்ட்ரே எனப்படும் இழான் பவுல் சார்லஸ் அய்மார்ட் சார்ட்ரே ( 21 ஜுன் 1905 – 15 ஏப்ரல் 1980) ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், நாவல் எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 20-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்ச் மெய்யியல் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளோர்களில் ஒருவர். 1964-ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆனாலும் இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ழான் பால் சார்ட்ரே என்று கையெழுத்து இடுவதும், நோபல் பரிசு வெற்றியாளர் ழான் பால் சார்ட்ரே, என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றார்.