x

Kalapriya

கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950) தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. இவர் 1974-ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

Related Products