Kannadasan
கண்ணதாசன், 24 ஜூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நாவலாசிரியரும் ஆவார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் என பல நூல்களை எழுதியவர் கண்ணதாசன். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். சிறுகதைகள், காப்பியங்கள், நாவல்கள், கவிதைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள கண்ணதாசன் 1981-ஆம் ஆண்டு தனது 54-வது வயதில் மறைந்தார். இவர் எழுதிய ‘சேரமான் காதலி’ என்ற நாவலுக்கு 1980-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.