x

K.Chandru

கே.சந்துரு. சந்திரசேகரன் ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆவார். ஆறாண்டுகளுக்கு மேல் நீதிபதியாக இருந்த காலத்தில் 90000 வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியவர். சமூகச் சிந்தனையும், அக்கறையும் கொண்டு இயங்குபவர். தனது சிறுவயதிலே பெற்றோரை இழந்த சந்துரு தனது அன்பு தம்பி சுந்தரேசனும் வளரும் வயதில் இறந்தார். இவர் தம் கல்வியைச் சென்னையில் உள்ள பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றார். இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார் அப்போது சென்னையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டார். சட்டக் கல்வியைப் படித்து 1976-ல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். 1997-ல் சீனியர் வழக்கறிஞர் ஆனார்.பல பொதுநல வழக்குகள் மனித உரிமை வழக்குகள் பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். 31-07-2006 அன்று உயர்நீதி மன்ற நிதிபதி ஆனார். நீதிமன்றங்களில் மை லார்டு என்று விளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். 8-3-2014-ல் பணி ஒய்வு பெற்றார்.

Related Products