x

Khalil Gibran

கலீல் ஜிப்ரான் (என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான், (ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895-ல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.1902-ல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், 1905 முதல் ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. 1923-ல் ஜிப்ரான் எழுதி வெளிவந்த ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Related Products