x

Konangi

கோணங்கி (பிறப்பு: 1958) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ. சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸின் பேரன் இவர். அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். 1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வரும் இவர், கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர் ஆவார். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந.முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ்.சம்பத், ஜி.நாகராஜன் ஆகிய தமிழ் எழுத்தாளர்களை வாசித்து, தமக்கென்று ஒரு தனித்த நடையை உருவாக்கியிருப்பவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோர் பற்றிய கல்குதிரை சிறப்பிதழ் தொகுத்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர். இலக்கியவாதிகளின் நண்பர். பாழி, பிதிரா, த, நீர்வளரி என்ற இவருடைய நான்கு நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ்.சண்முகம் ஆகியோர் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன.

Related Products