x

Kudavayil Balasubramanian

குடவாயில் பாலசுப்ரமணியன், திருவாரூர் மாவட்டம், குடவாயில் வட்டம், பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் வரலாறும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., கட்டடக்கலையும் பயின்றார் கோயிற்கலைக்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றிவரும் பணிக்காக பிப்ரவரி 2016-ல் இவர் முதுமுனைவர் பட்டம் (Doctor of Letters (honoris causa)) பெற்றார். இவர் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பணிபுரிந்து உள்ளார். 100=க்கும் மேற்பட்ட பழங்கால கல்வெட்டுக்களையும், பழங்கால நாணயங்கள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்து தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நூல்கள்: இவர் திருவாரூர் திருக்கோயில், தஞ்சாவூர், ராஜராஜச்சுரம், நந்திபுரம், கபிலக்கல், தஞ்சை நாயக்கர் வரலாறு உள்பட, 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

Related Products