La.sa.Ramamrutham
லா.ச.ரா. என்று அழைக்கப்பட்ட லா.ச.ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால், தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக லா.ச.ரா. என்ற பெயரில் எழுதி வந்தார். லா.ச.ராவின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவலை எழுத வைத்தது. இவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை ‘சிந்தாநதி’ தினமணி கதிரில் தொடராக வந்தது. 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.