Malarvathi
மலர்வதி (பிறப்பு:1979) தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் மேரி ஃப்ளோரா. அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். 'தூப்புக்காரி' என்னும் நாவலுக்காக, இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். சாகித் அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது, தந்தை பெரியார் விருது, நாமக்கல் கு.சின்னப்ப பாரதி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது, கவிஞர் கவிமணி தாசன் விருது, எழுத்தாளர் புதுமைப்பித்தன் விருது (இருமுறை) உள்ளிட்ட பல விருதுகளை தன் படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.