x

Manushya Puthiran

அப்துல் ஹமீது என்னும் இயற்பெயர் கொண்ட மனுஷ்யபுத்திரன் (பிறப்பு: மார்ச் 15, 1968) திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பல்வேறு இலக்கிய மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். 2002-ஆம் ஆண்டு இவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான "சன்ஸ்கிருதி சம்மான்" வழங்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004-ஆம் ஆண்டு இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார். 2011-ஆம் ஆண்டு "அதீதத்தின் ருசி" கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு, ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது. தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

Related Products