x

Mu.Metha

மு.மேத்தா என்றழைக்கப்படும் முகமது மேத்தா, (பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். உவமை உருவகங்களில் பழமையையும், புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு ‘கண்ணீர்ப் பூக்கள்’. காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ‘தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி’ என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித்தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் என, மு.மேத்தா இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் ‘ஊர்வலம்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது ‘சோழ நிலா’ என்னும் வரலாற்று நாவல், ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலான ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது

Related Products