x

Napoleon Hill

நெப்போலியன் ஹில் (அக்டோபர் 26, 1883 - நவம்பர் 8, 1970) ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது மிகவும் பிரபலமான திங்க் அண்ட் க்ரோ ரிச் (1937), எல்லா காலத்திலும் சிறந்த விற்பனையான புத்தகங்களுள் ஒன்றாக உள்ளது. 1970-ல் ஹில் இறந்த நேரத்தில், திங்க் அண்ட் க்ரோ ரிச் 20 மில்லியன் (2 கோடி) பிரதிகள் விற்றிருந்தது. இவரது முதல் புத்தகம் 'தி லா ஆஃப் சக்சஸ்' 1928-ஆம் ஆண்டில் வெளியானது. ஹில், தனது சொந்த அனுபவங்களினூடாக நம்பிக்கை தரும் கருத்துக்களை வழங்கியுள்ளார். 1933-ஆம் ஆண்டு தொடங்கி 1936-ஆம் ஆண்டு வரையில் நெப்போலியன் ஹில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ் வெல்ட்டின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மனிதனின் மனதில், “அடையமுடியும் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டால், எதையும் அடையமுடியும்” என்பது ஹில்லின் தனித்தன்மை வாய்ந்த அடையாளமாக காணப்பட்டது. சாதிப்பது எவ்வாறு சராசரி நபர்களை வெற்றி சென்றடைகிறது உள்ளிட்ட சூத்திரங்கள் இவரது புத்தகங்களில் கருவாக இருந்தன.

Related Products