x

Pavannan

பாவண்ணன் (பிறப்பு: 20 அக்டோபர் 1958) தமிழ் எழுத்தாளர். இவருடைய முதல் சிறுகதை நா.பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982-ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும், பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதி வருகிறார். தமிழ்ச் சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும், வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. ஐம்பது தமிழ்க்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணைய தளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள், இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கத்தக்கவை. சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் என பல தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். 60 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள பாவண்ணன், தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகாவுக்கு சென்றார். அங்கு கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று, தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார்.

Related Products