x

Poppu

போப்பு (பிறப்பு: மார்ச் 7, 1960) தமிழ் எழுத்தாளர், இயற்பெயர் போ.புருஷோத்தமன். விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் எனும் ஊரில் போப்பு ஆறு குழந்தைகளில் முதல் குழந்தையாக பிறந்தார். சிறுவயது முதலே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 12 வயது முதலே நூலகங்கள் வழியாக கதைகள், கவிதைகள், நாவல்கள் என படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தனது பதினைந்தாம் வயதில் முதல் கவிதையை படைத்து இருக்கிறார். மாணவப் பருவத்தில் சக மாணவனின் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இலக்கிய உலகத்திற்கு அழைத்து வந்தது. அண்ணாவின் நூல்கள், பாரதிதாசனின் கவிதைகள், பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் ஆகியோரை தனது எழுத்துக்கான முன்னோடியாக கொண்டார். கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புப் பணி, இயற்கை சார்ந்த உணவகம், அக்குபங்சர் மருத்துவம் என வேறுபட்ட அனுபவம் கொண்டவர் போப்பு 1990- ஆம் ஆண்டு, 'கருப்பு மை' என்ற சிறுகதை முதல் முறை கல்கி இதழில் பிரசுரமானது. அதே ஆண்டு இவர் எழுதிய இரண்டாம் சிறுகதையான 'வேரில் துடிக்கும் உயிர்கள்/ என்ற கதை உரத்த சிந்தனை என்ற அமைப்பின் மூலம், அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டு செம்மலரில் வெளியானது. 1993-ல் கூடுகளை விட்டு கவிதைத் தொகுப்பு வெளியானது, பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டு நாளைக்கு மழை பெய்யும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 2010ல் புதுச்சேரிக்கு குடிபெயர்ந்து முழுநேர எழுத்தாளராக அரசியல், சுற்றுச்சூழல், நாவல் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மாற்றுமருத்துவம் உடல் மீதான ஈடுபாட்டின் பேரில் அக்குபங்சர் பயின்று, தற்பொழுது நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.

Related Products