x

Saravnan Chandran

சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழ் எழுத்தாளர், ஊடகவியலாளர்,வணிகர், வேளாண் தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியினை சூரியநாராயண சாஸ்திரிகள் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். ஒன்றாம் வகுப்பு அப்பாவின் சொந்த ஊரான தேனிக்கு இடம்பெயர்ந்தார். 3-ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறியது. கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார். பள்ளிக் காலத்தில் சரவணன் சந்திரன் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் அமைந்துள்ள தமிழக அரசு விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது. நாவல்கள், கட்டுரைகள்,என இதுவரை 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products