Solai Sundaraperumal
சோலை சுந்தரபெருமாள் (1951 - 2021) தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழியில் எழுதிவந்த இவர் ஒரு பள்ளி ஆசிரியர். திருவாரூருக்கு அருகில் உள்ள காவனூர் என்ற சிறு கிராமத்தில் வசித்து வந்தார்.